School Reunion

பல காலம் வாழ்ந்த கூட்டிற்கே

பள்ளிப் பறவைகள் திரும்ப இருக்கின்றன

 

இந்த கூட்டில் தான்

பறக்க கற்றுக்கொண்டோம்

இறக்கை விரிக்கக் கற்றுக்கொண்டோம்

தொலை தூரம் சென்றாலும்

தொடங்கிய புள்ளி இதுவென்றே அறிவோம்

 

இந்தக்

கரும்பலகை கலைக்கூடத்தில் தான்

கற்றது எத்துணை

பெற்றது எத்துணை

 

இந்த அறிவாலயத்தில்

ஆகம விதிகளாய்

ஆர்க்கமிடீசின் விதிகள் கற்றோம் ;

நிதமும்

பிதா அழைத்து வந்துவிட்டதும்

பிதாகோரஸ் தியரம் படித்தோம்

மேட்னிக்கு மதியம் போய்விடாமல்

பாட்னி நம்மை தடுத்தது

 

இங்கு படிக்காமலிருந்தால்

மானாட மயிலாடவில்

கெமிஸ்ட்ரி என்றதுமே

நமக்கு புதிராயிருந்திருக்கும்

 

அசோகர் மரம் நட்டது

காந்தியை கோட்ஸே சுட்டது

வாழ்க்கை ஆற்றை கடக்க

அறிந்துகொண்டோம் வரலாற்றை

 

அமிலங்களை கலக்கினோம்

அமிபியாவை நுண்ணோக்கியில் கண்டோம்

அலறிக்கொண்டே அல்ஜீப்ராவில் அமிழ்ந்தோம்

 

 

மொழிகளைப் படித்தோம்

திரு-திரு வென்று முழித்துக்கொண்டே

திருக்குறள் ஒப்புவித்தோம்

அகமும் புறமுமாய்

நானூறு படித்தோம்

 

வஞ்சிகள் வாழ்வில்

பின்னர் வரும் முன்னே

குற்றாலக்குறவஞ்சியோடு குதூகலித்தோம்….

 

சரளமாய் இன்று பேசாவிடினும்

வாழ்க்கையின்

சாரளங்களை திறந்திட

ஆங்கிலம் கற்றோம்…

 

 

உன் மதிப்பை எண்ணு

அதுக்கு வேணுமடா

மதிப்பெண்ணு

என்று அச்சுறுத்தப்பட்டோம்

அந்த அச்சுறுத்தலே

நம் வாழ்வை வடிவமைத்த அச்சு

 

அகத்தை மட்டுமா

நம்

நகத்தை கூட சீராக்காமல்

விட்டுவைக்கவில்லை

 

 

படிப்பு மட்டுமே பள்ளிவாழ்வென்றால்

பிடிப்பு இருக்குமா ?

 

பட்டாம்பூச்சி பிடித்தனர் சிலர்

பட்டம் பறக்கவிட்டனர் சிலர்

திட்டம் ஏதுமின்றியே

மாலையில் திரிந்த கூட்டமும் இருந்தது….

 

விளையாட்டாய் படித்தாலும்

விளையாட்டில் கவனமாயிருந்தோம்

 

தேர்வு அரக்கன் அவ்வப்போது

தேரோட்டி வருவான்

ஒதுங்கி நின்று

வழி விட்டோம்

அச்சப்பட்டு வியர்வையை

வழிய விட்டோம்

 

அன்று

பாஸான பலரும்

இன்று பாஸ்

பெயிலானவரும்

இன்று மாஸ்

 

 

பொத்தாம் பொதுவான படிப்பு

பத்தாம் வகுப்போடு

நிறைந்தது

அன்று முதலே

கவலையில்லா இன்பவூற்றும்

குறைந்தது

 

 

ஒரே முத்துமாலையில் சிதறிய

முத்துக்கள் நாம்

எடுக்கவும்

கோர்க்கவும்

இனி வருமா காலம் ?

 

இன்றைய நம்

அடையாளங்கள்

பள்ளி தந்த நேற்றைய

கொடை

 

நாசி இருந்தால் மட்டுமே

சுவாசிக்கமுடியும்

ஆசானின்

ஆசி இருந்தால் மட்டுமே

சாதிக்கமுடியும்

 

கற்சிலை

சிற்பிக்கு விலை பெற்றுத்தரும்

தங்கம்

புடம்போட்டவனுக்கு பொக்கிஷமாகும்

 

நம்மை

செதுக்கியவர்களுக்கும்

புடம் போட்டவர்களுக்கும்

என்றுமே

விலை தர இயலாது

தலை தாழ்ந்து வணங்குதலை

தவிர

Advertisements

About hariharanbond
I am who I am !

2 Responses to School Reunion

  1. Jeeva says:

    Hi Hari – That’s quite a good one…..the emotions, the commotions, our untold fears, those carefree days etc. etc….leaves me quite nostalgic and how I wish, we were all Peter Pans and SRDFVV our Neverland……alas, there is a real world out there and all the time jolting us back to reality….may be June 13/ 14 would be our opportunity to turn back the clock and bring back the Peter Pan in all of us once more…..quite well said…

    Nice to end it all with a thanksgiving note too.

    Regards / Jeeva

  2. Venkki Ram says:

    கவிதை நடை நல்லாயிருக்கு ஹரி. உங்களுக்கே உரிய அங்கதம் சிறப்பு! தொடர்ந்து எழுதுங்க. ரசித்துப் படித்தேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: