பினாமி

சாட்டின் பெட்டில் படுத்திருந்த நீலுவின் தூக்கத்தை கெடுத்தது அலாரம்.

அசதியாக இருந்தது. தோள்பட்டையில் வலி. இருக்காத பின்னே. எழுவத்தி அஞ்சு கிலோ தூக்கற வயசா. டிசம்பர் 12 வந்தா அமபத்தி எட்டு. எவ்வளவு ஜாக்கிரதையா இருந்த்தாலும் இப்படி நடந்திடுது.

எழுந்து கண்ணாடியில் முகம் பார்த்தார். வழுக்கை கூட நல்லாத்தான் இருக்கு.

‘எப்படியிருந்த நான் இப்படியாயிட்டேன்’ என்று நினைத்துக்கொண்டார்.

‘சரி ரொம்ப நேரம் இப்படி நிக்க முடியாது’ மூளை எச்சரித்ததும் காலை கடன்களை முடிக்க குளியலறைக்குள் புகுந்தார்.

குளித்து உடையணிந்து கீழே இறங்கினார்.

‘குட் மார்னிங் சார்’ என்று எதிர்கொண்டார் செக்ரட்டரி ஓம்.

‘ஓம் இன்னிக்கி ஷெட்யூல் ஏதாவது இருக்கா..

‘இன்னிக்கி ஒண்ணுமில்லை சார். ஆடிட்டர் 9 மணிக்கு வர்றார். டாக்டர் வந்திருக்கார். வீக்லி செக்கப்’ எனும் போதே டாக்டர் ஜீவா வந்தார்.

‘ஹலோ நீலு..எப்படியிருக்கீங்க’

‘ஓ.கே டாக்டர்.’

‘வாங்க டாக்டர்..என்ன ஓ.கே..நேத்து எல்லாம் தோள் வலி நு சொல்லிட்டிருந்தார். கொஞ்சம் பாருங்க’      என்றபடி வந்தார் நீலுவின் மனைவி ‘டிஸ்க்ட்ரைவ்’

‘என்ன ஆச்சு நீலு’

‘என்ன பண்ணரது ஜீவா…நாய் வேஷம் போட்டா குறைக்காம இருக்க முடியுமா…அவ கிடக்கா நீங்க பாருங்க’

ப்ரஷர், சுகர், பல்ஸ் எல்லாம் டெஸ்ட் முடிந்தது.

‘இங்க பாருங்க நீலு…யூ ஆர் நாட் யங் எனி மோர்…கொஞ்சம் உங்க ஆக்டிவிடீஸை குறைச்சுக்குங்க…போனது போனது தான் வராது’

‘என்ன ஜீவா..நீங்களே இப்படி சொல்லறீங்க…எனக்கு டயத்துல நடந்திருந்தா நான் ஏன் இப்படி கஷ்டப்படப்போறேன்…என் விதி நடக்கனும் நு நான் நினைச்சப்போ நடக்கல…இப்போ நடக்குது..இந்த சமயத்துல தான நான் நாலு காசு பார்க்க முடியும்’

‘உங்க இஷ்டம்’

‘சரி ஜீவா…பேஸ்ல ப்ளாஸ்டிக் சர்ஜரி பண்ணணும்னு சொன்னேனே….ஏதாவது ஏற்பாடு பண்ணீங்களா…’

‘ஐ ஆம் ட்ரையிங்’

‘சீக்கிரம் டாக்டர்….கன்னத்துல சதை ஓவரா ஆடுது’

‘சரி நான் வரேன்’ என்று ஜீவா கிளம்பினார்.

நீலுவிடம் உப்பில்லா கஞ்சியை நீட்டினாள் டிஸ்க். குடித்து சோபாவில் சாய்ந்தார் நீலு.

கோழி தூக்கத்தை கலைத்தது ‘ஹாய் டாட்’ என்ற பச்சைசில்லுவின் குரல். தமிழ் திரையுலகின் முன்னனி ஹீரோ நீலுவின் ஒரே வாரிசு.

தூக்கம் கலைந்து 22 வயது மகனை பார்த்தார். ஆடம்பரமாக வளர்ந்திருந்தான்.

மகனிடம் பேச முனைவதர்க்குள் ஆடிட்டர் சாரதியோடு வந்தான் ஓம்.

‘சார்…மேட்டரை சாருக்கு சொல்லிட்டேன்’

‘வாங்க சாரதி சார்…அந்த கேளம்பாக்கம் காம்ப்ளக்ஸ் பேப்பர்சை பார்த்திட்டீங்களா’

‘யெஸ் சார்..க்ளீன் ஸ்லேட்…நோ ப்ராப்ளம்…முடிச்சிடலாம்’

‘குட். ஓம்…கொட்டிவாக்கத்துல இருக்கிற என் மாமா கோவிந்தை வரச்சொல்லு…அவர் பேர்ல தான் ரிஜிஸ்ட்ரேஷன்’

‘டாட்…என்ன இது..வாங்க ப்ராப்பட்டீஸ் எல்லாம் பினாமி பேர்லயே ரிஜிஸ்டர் பண்ணா எப்படி டாட்…ஒய் நாட் இன் மை நேம்’

‘டேய் முட்டாள்…அறிவில்லாம பேசாத…எது எப்படி செய்யணுமோ எங்களுக்கு தெரியும்’

‘ஆமா..பச்சை சில்லு….இன்கம் டாக்ஸ் மேனேஜ் பண்ணரதுக்கு இப்படி சில பினாமி டீலிங்ஸ் பண்ணணும்.’ என்றார் சாரதி.

‘ஓ.கே சாரதி நீங்க நடக்கவேண்டியதை பாருங்க’ என்றவுடன் சாரதி விடைபெற்றார்.

கோபத்தில் முகம் சிவந்த மகன் அருகே அமர்ந்தார் நீலு.

‘இதோ பாருப்பா…அப்பா என்ன செய்தாலும் உன் நல்லதுக்கு தான் செய்வேன்…’

‘……………………’

‘என்ன நம்பு…யாரு பினாமியாயிருந்தாலும் நம்ம சொத்து வேற கைக்கு போயிடாது…கவலைப்படாமயிரு’

‘……………………’

‘பேசுப்பா’

‘சரிப்பா இதை விடுங்க…என்ன வெச்சு ஒரு படம் பண்ணி லான்ச் பண்ணக்கூடாதா..இன்னும் எத்தனை நாளைக்கு வெளியே உங்க பையன் நு சொல்லாமயிருப்பேன்’

கடகடவென்று சிரித்தார் நீலு.

‘ஹேய் என்னப்பா தமாஷ் பண்ணறியா நானே நாலு வருஷமாத்தான் ஹீரோ வா சக்ஸஸ் ஆகியிருக்கேன். இது என்னோட டைம்…நீ இன்னமும் பத்து வருஷமாவது காத்திருக்கணும். உனக்கு வயசிருக்குப்பா’

‘இல்லப்பா….என் கால யூத்தோட எனக்கு பெட்டர் கனெக்ட் இருக்குமில்லையா..’

‘என்னது உன் காலத்து யூத்தா….அவங்க தான் இப்போ என் பின்னாடி சுத்தராங்களே…தோ பாருப்பா..இப்போ பொறக்கிற குழந்தைங்க யூத் ஸ்டேஜுக்கு வருவாங்கில்ல அவங்களுக்கு நீ ஹீரோவாகலாம். இது என் டைம்’

‘………………………….’

‘இதோ பாருப்பா…எனக்கு என்ன வயசுன்னோ…எனக்கு 22 வயசுல ஒரு மகன் இருக்கான்ங்கறதோ இவங்களுக்கு தெரியாது’

‘——————————–‘

‘பாரு என்ன வலின்னாலும் கஷ்டம்னாலும் படத்துக்கு படம் அஞ்சு ஃபைட் பண்ணரேன்….ஹீரோயினை தூக்கறேன்…நேத்துக்கூட பாரு மோனிஷா வோட டூயட். சரியான வெயிட் அவ. இருந்தாலும் தூக்கிட்டேனே..ஏன்..என் இமேஜுன்னு ஒண்ணு இருக்கில்ல..அதை நான் மெயின்டெயின் பண்ணணும்’

‘…………………………….’

‘என்ன பண்ணறது. நான் அம்பது வயசுல தான் முட்டி மோதி ஹீரோவாக முடிஞ்சது. அஞ்சு வருஷம் முன்னாடி ‘ஆணவக்காரன்’ ரிலீஸ் ஆகி என்னோட ஃப்ர்ஸ்ட் ஹிட்…அப்புறம் தான் பெரிய பேனர், அட்வெர்டைஸ்மென்ட்னு நான் பிஸியானேன். அதை சீக்கிரமா இழக்க முடியுமா’

‘இவங்களுக்கு, இந்த ஜெனரேஷனுக்கு, நான் தான் யூத் சிம்பல்…உனக்குனு ஒரு காலம் வரும்….அது இப்போ இல்ல’ எனும் போது கூர்க்கா வந்தான்.

‘என்னப்பா’

‘சார் வெளியில ஒரே கூட்டம். நீங்க ஒரு தடவை’ என்று தலை சொறிந்தான்.

‘வரேன்’ என்ற நீலு மாடிக்கு விரைந்தார். விக் எடுத்து மாட்டி, ஜீன்ஸ் பேன்டும், டீ ஷர்டும் அணிந்தார். ரே பான் கூலிங்க்ளாஸ் அணிந்து பால்கனியில் நின்றார்.

‘இளமை நாயகன் நீலு காந்த் வாழ்க’ என்ற முழக்கம் பச்சைசில்லுவின் காதில் விழுந்தது.

Advertisements

About hariharanbond
I am who I am !

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: