கருத்து கண்ணாயிரம்

 

காலை ஆறு மணி. எழுந்திரிச்சி பல் துலக்கி, பால்கனியில் சூரிய தரிசனம் செய்யும் போது தான் நேற்றைய இரவு நடந்தது நினைவுக்கு வந்தது. ‘ஹி..ஹி வாங்க தம்பி…என்ன இன்னிக்கி சீக்கிரமாவே வந்துட்டீங்க போலிருக்கே’ என்று மாடிப்படி ஏறும் போது என்றும் பேசாத வீட்டுக்கார மாமா நீலசில்லு பல்லிளித்தார். நேற்று ஒன்றாம் தேதி !… வாடகை தர வேண்டுமென்பது நினைவுக்கு வந்ததும், சட்டை எடுத்து மாட்டினேன். தக்கணூன்டு பத்துக்கு பத்து வித் அட்சாச் பாத்ரூம் போர்ஷனுக்கு நாலாயிரம் ரூபாய் வாடகை. என்ன செய்வது, பாச்சிலர்ஸ் பாடு திண்டாட்டம் தானே. கீழே இறங்கி வாயில் கதவை தட்ட முன்டா பனியனும் ‘ஹிந்து’வுமாக கதவை திறந்தார் நீலுமாமா… ‘ஹி..ஹி…வாப்பா’ ‘இந்தாங்க’ என்று நாற்பது 100 ரூ தாள்களை நீட்டினேன். ‘ஹி…ஹி…..இருப்பா காபி சாப்பிட்டு போலாம்…..விசாலம் நம்ம ஹரி வந்திருக்கான் பாரு…ஒரு காபி கொண்டா….உட்காருப்பா’ சோபாவில் அமர்ந்து ஹிந்து சப்ளிமென்டை மேய தொடங்கினேன். ‘இந்தாப்பா’ ஆவி பறக்கும் காபியோடு விசாலம் மாமி. ‘மெயின் பேப்பர் பார்க்கிறியா’ என்று நீலுமாமா ஹிந்துவை தந்தார். காபியை பருகியவாறே பேப்பரை நோட்டம் விட்டேன். ‘ஏன்னா..வர்ற ஞாயித்துகிழமை கோயிலுக்கு போகணும்’ ‘ம்’ ‘ஏன்னா….அடுத்த வாரம் புதன் கிழமை பேரன்ட்ஸ் டீச்சர் மீட் இருக்கு. நம்ம ராம்பிரசாத்தோட க்ளாஸ் டீச்சர் சொல்லி விட்டுருக்கா…படுவா பய பொண்ணுங்களை சேட்ட பண்ணுரானாம்’ ‘ம்’ ‘ஏன்னா…அடுத்த மாசம் தீபாவளி….புதுத்துணி எடுக்கணும்’ ‘ம்’ ‘ஏன்னா….அடுத்த ஸன்டே பக்கத்தாத்து க்ரேஸ் மாமி வீட்டுல பர்த்டே பார்ட்டி…கிஃப்ட் வாங்கணும்’ ‘ம்’ ‘ஏன்னா…இன்னும் ரெண்டு வாரத்துல இன்சூரன்ஸ் ப்ரீமியம் கட்டணும்…’ ‘ம்’ இதற்கு மேல் என்னால் பொறுக்க முடியவில்லை.. ‘ஹென் பெக்கிங்’ கேள்வி பட்டிருக்கிறேன். இதென்ன புது முறை….வரப்போகும் புயலுக்கு ‘ரமணன்’ தரும் செய்தி போல…நாளைக்கு, அடுத்த வாரம், அடுத்த மாதம் வரப்போகும் வேலைகளுக்காக இப்போதே லட்சார்சனையா… பொறுக்காமல் கேட்டே விட்டேன். ‘ஏன் மாமி…இப்படி மாமவை தொல்ல பண்ணரேள்…அடுத்த வாரம், மாசம் செய்யவேண்டியதெல்லாம் இப்பவே ஒரு பாட்டு பாடணுமா’ மாமி சிரித்தார். ‘அது இல்லடா அம்பி….இப்போ நீ இருக்கே…ஏதோ சாப்ட்வேர் கம்பெனில குப்பைக் கொட்டிண்டு காலத்த ஓட்டற…ஆனா ‘இவர்’ அப்படியா…ஆத்துலேயே ஒக்காந்துண்டு ‘கருத்துல கதை எழுதறேன்னு’ காலட்சேபம் பண்ணிண்டிருக்கார்…’ ‘…..அதுவும் லேசு பட்ட இடமா…ராத்திரி பூரா முழிச்சிண்டு ‘ஓம் இங்க போனான், க்ரேஸ் இதப் பண்ணானு கதை’ எழுதறார்…’ ‘….அதுவும் சீக்கிரம் அப்டேட் ஆறதோ….செல தடவை…24 ல்லிருந்து 48 மணி நேரம் ஆயிடறது…டபிள்யு டபிள்யு டபிள்யு கருத்து டாட் காம் நு டைப் பண்ணிட்டு அதுக்கு மின்னாடியே தேவுடு காத்திண்டிருக்கார்…சில நேரம் ‘ஏன்டி நான் சாப்பிட்டேனே அது நேத்தையதா இன்னித்துதா நு’ என்னையே கேக்கரார் டா அம்பி….’ ‘…அதான் கருத்து பாணிலேயே…இன்னிக்கி இவர் காதுல விஷயத்தை போட்டா ஒரு வாரமோ இரண்டு வாரமோ அவர் ஞாபகத்துல அப்டேட் ஆகுமில்லையா’ நான் சிரித்துக் கொண்டே ‘சூப்பர் ஐடியா மாமி’ என்று காபி டம்ப்ளரை கீழே வைத்தேன். ‘நான் வரேன் மாமா….நான் வரேன் மாமி’ என்று எழுந்து வெளியேறினேன். நான் மாடி ஏறும் போது ‘ஹரியா அவன் அப்பவே போயிட்டானே’ நு மாமி நீலு மாமாவிடம் சொல்லிக்கொண்டிருந்தது தெளிவாகக் கேட்டது.

 

 

Advertisements

About hariharanbond
I am who I am !

2 Responses to கருத்து கண்ணாயிரம்

  1. a grand jovian says:

    hahaha only few can uderstand

  2. a grand jovian says:

    hahaha only few can understand

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: