சிறுகதை : வெள்ளை

வெள்ளை
————–

“யாம் இங்கு கடன் அட்டைக்கு அனுமதி தருவதில்லை” என்று கடை சிப்பந்தி கூறியதும் செய்வதறியாது திகைத்தான் இன்பரசன்.

அவன் இருந்தது சேலம் நகரத்தின் மிகப் பெரிய துணி அங்காடியான “யாம் சகோதரர்கள்” என்ற இடத்தில்.

“அன்பரே யாம் இந்த நகரத்துக்குப் புதியவன். யாம் ரொக்கமாக பணம் எடுத்து வரவில்லை. யாம் வாங்கிய துணிகளுக்கு எப்படி பணம் தருவது ?”

“உங்கள் நிலமை எனக்குப் புரிகிறது. எனினும் கடன் அட்டையை அனுமதிப்பதில்லை என்பது எங்கள் கடையின் கொள்கை. அதை மாற்றவோ, மீறவோ எனக்கு அனுமதியில்லை”

இன்பரசனின் முகம் கவலையில் கறுத்தது.

“ஒன்று செய்யுங்களேன்..இந்த கடை இருக்கும் சாலையிலேயே ஒரு நான்கு காத தூரம் சென்றீர்களானால் நீங்கள் கடன் அட்டை வைத்திருக்கும் வங்கியின் தானியியக்க வங்கி இயந்திரம் உள்ளது. அங்கு சென்று நீங்கள் பணம் பெற்றுக்கொண்டு வந்து இங்கு செலுத்திவிடுங்களேன்’

‘இது நல்ல யோசனை…நனி நன்று…யாம் உடனே அங்கு செல்கிறோம்…ஆம் அங்கு செல்ல வாகனம் எதுவும் கிட்டுமோ’

‘கடையின் வாயிலருகேயே மூன்று சக்கர வாடகை ஊர்திகளின் நிலையம் உள்ளது’

‘நன்றி…அங்கு சென்று வர வாடகை எவ்வளவு ஆகும்’

‘நான் அறிந்தவரை அம்பது ரூபாய் வரை ஆகும்’

‘மிக்க நன்றி…நான் உடனே சென்றுவருகிறேன்’

கடையின் கண்ணாடிக் கதவை திறந்து வெளியே வந்த இன்பரசன் தன் பணப்பையை பார்த்தான்.

ஒரு வெளிர் அம்பது ரூபாய்த்தாளும், கசங்கியும் சிறு சிறு கிழிசல்களுடனும் அய்ந்து பத்து ரூபாய் தாள்களும் இருந்தன.

எப்படியாவது இந்த பத்து ரூபாய் தாள்களை வாடகை ஊர்தி ஓட்டுனரிடம் வாடகையாக தந்துவிடவேண்டும் என்று எண்ணியபடியே வாடகை ஊர்த்தி ஒன்றை அமர்த்தினான்.

வங்கியின் தானியங்கி நிலையத்துக்கு சென்று மீண்டும் வருவது என்று ஓட்டுனரிடம் சொல்ல அவரும் ஏற்றுக்கொண்டார்.

பதினைந்து நிமிட பயணத்திற்க்கு பின் வங்கியின் தானியங்கி இயந்திரம் இருக்குமிடம் வந்தது.

உள்ளே சென்று கடன் அட்டையை உபயோகித்து பணம் பெற்றுக்கொண்டு வந்தான் இன்பரசன்.

புத்தம்புது நூறு ரூபாய் தாள்களை பணப்பையில் வைக்கும் போது மீண்டும் நினைத்துக்கொண்டான்.

‘இந்த பழைய பத்து ரூபாய் தாள்களை ஓட்டுனரிடம் கொடுத்துவிட வேண்டும்’.

மீண்டும் பதினைந்து நிமிட பயணத்திற்கு பின் “யாம் சகோதரர்கள்” அங்காடி வந்தது.

“இந்தாருங்கள்” என்று கிழிசல் தாள்களை ஓட்டுநரிடம் தந்தான் இன்பரசன்.

“வேறு தாள் கிடையாதா” என்றார் ஓட்டுநர்.

“ஏன் இந்த தாள்களுக்கு என்ன கேடு ?” பொய்க்கோபம் காட்டினான் இன்பரசன்.

“இல்லை ஐயா. பழைய தாள்களாகயிருந்தாலும் பரவாயில்லை. இவற்றில் கிழிசல்களும் உள்ளனவே..இதை நான் கொடுக்க யாரும் வாங்கிக்கொள்ள மறுத்தால் எனக்கு உபயோகமற்று போய்விடுமல்லவோ” என்றார் பணிவாகவே.

கொஞ்சம் சீறினால் தான் சரியாகும் என்று நினைத்த இன்பரசன்

“என்னய்யா நினைத்துக்கொண்டு பேசுகிறீர்….நான் என்ன உங்கள் ஊருக்கு என் கிழிசல் தாள்களை கொடுத்து ஏமாற்ற வந்தவனா…நாளை காலை நான் என் சொந்த ஊருக்கு திரும்புகிறேன்…அது வரை நான் பாரதி தெருவில் உள்ள “தமிழன் விடுதியில்” அறை எண் 113ல் தங்கியுள்ளேன்…இந்த தாள்கள் அது வரை உன்னால் மாற்ற முடியாவிட்டால் அங்கு வந்து எம்மை பாரும். உமக்கு நான் நூறு ரூபாயே தருகிறேன்” என்று கோபமாக பேசிவிட்டு இன்பரசன் அங்காடிக்குள் நுழையும் போது தான் தேநீருக்காக வெளியே வந்து கொண்டிருந்த கடை சிப்பந்தி மேல் மோதினான்.

கீழே விழுந்த தன் பணப்பையை எடுத்துக்கொண்டு சிப்பந்தி கூறிய “மன்னிக்கவும்” என்பதை செவிமடுக்காது உள்ளே சென்றான்.

*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*__*_* _*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*

இரவு உணவை முடித்துக்கொண்டு தன் அறையில் படுத்துக்கொண்டவாறு அன்றைய நிகழ்வுகளை அசை போட்டான் இன்பரசன்.

அலுவலக வேலை முடிந்தது. மனைவிக்கு சேலையும் வாங்கியாயிற்று.

ஓட்டுநரிடம் கோபமாக பேசியது நினைவுக்கு வந்தது. எப்படியோ தாள்களை கைமாற்றியது நிறைவேறியது என்று எண்ணியபடியே தூங்கிப்போனான்.

*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*__*_* _*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*

அதிகாலையில் எழுந்து குளித்து தயாரானான் இன்பரசன். அறையை காலி செய்யப்போவதாக தொலைபேசியில் வரவேற்றுப்பறை சிப்பந்தியிடம் சொன்னான்.

அவரது அழைப்புக்காக காத்திருந்த போது தான் அறையின் அழைப்புமணி ஒலித்தது.

கதவை திற்ந்த இன்பரசன் கண்டது முந்தையதினம் சண்டையிட்ட அதே மூன்று சக்கர ஓட்டுநர்.

உள்ளே கோபக்கணல் ஊற்றெடுக்க “என்னய்யா தாள்களை கொடுத்து ஏமாற்றிவிட்டேன் எனப்போகிறீரா…இந்தாரும்” என்று தன் பணப்பையை துழாவி ஒரு நூறு ரூபாய் தாளை எடுத்தான்.

“பொறுங்கள் அன்பரே நான் அதற்காக வரவில்லை”

“பின் எதற்கு எமது அறையை தேடி வந்தீர் ?”

“உங்களது பணப்பையை பாரும்…அதில் உமது கடன் அட்டை இருக்கிறதா ?” எனவும் தேடினான் இன்பரசன்.

பணப்பையின் எல்லா அறையையும் தேடியும் கிடைக்கவில்லை.

திகைத்தான் இன்பரசன் !

“இந்தாருங்கள்….” என்றபடி கடன் அட்டையை நீட்டினார் அந்த ஓட்டுநர்.

“இது….எப்படி …உங்கள் கையில்….” தடுமாறினான் இன்பரசன்.

“நேற்று நீங்கள் கடை சிப்பந்தி மீது மோதினீர்களே அப்போது தவறி விழுந்திருக்கிறது. நானும் கவனிக்கவில்லை. இரவு நான் மீண்டும் என் ஊர்தியை அங்கு நிறுத்தி வீடு திரும்பும் போது கடை சிப்பந்தி இருவர் பேசிக்கொண்டிருந்ததை தற்செயலாகக் கேட்டேன்”

“……”

“அப்போது தான் உங்கள் கடன் அட்டை தவறிய செய்தி அறிந்தேன். நீங்கள் இருக்கும் இடம் அவர்களுக்குத் தெரியாததால் என்ன செய்வதென்று யோசித்துக்கொண்டிருக்க, நான் அந்த அட்டையை உங்களிடம் சேர்ப்பதாக கூறி நான் வாங்கிக்கொண்டேன்…இரவு நேரமாதலால் நான் உடனே வர இயலவில்லை. அதனால் தான் காலையில் வந்தேன். நான் வருகிறேன்” என்று பதிலுக்கு காத்திராமல் வெளியேறினார்.

கடன் அட்டையை வெளிர் தாள்களுக்கு நடுவே வைத்தான் இன்பரசன்.

‘சே ! கடன் அட்டைக்கு பதில் நாம் கீழே விழுந்திருக்கலாம். ஒரு சில மணி நேரமாவது வெள்ளை மனிதனோடு இருந்திருக்கலாமே” என்று தம் விதியை நொந்துக்கொண்டன இன்பரசனின் பணப்பையில் தற்கால சிறையுற்ற அந்த வெள்ளை தாள்கள்

About hariharanbond
I am who I am !

One Response to சிறுகதை : வெள்ளை

  1. vakulam says:

    Nice story. This is the attitude of many people now. It has become very hard to see people with clean heart.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: