கதையல்ல நிஜம்

‘அவன் மட்டும் கையில மாட்டினான் கைமா பண்ணிடுவேன்’ ங்கற மாதிரி சில சமயம் நமக்கு கோபம் வருமில்லையா ?

அப்படி ஒரு கோபத்தில் நான் இருக்கிறேன் !

படிங்க உங்களுக்கே புரியும்.

இரண்டாயிரத்து இரண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு நாள் நான் என் போக்கில் சிவனே என்று என் பைக்கில் போயிக்கொண்டிருந்தேன்.

என் வீட்டிலிருந்து ஒரு அரை கி.மியில் முதல் சிக்னல். சிக்னல் விட்டதும் சிட்டாய் பறந்த போது தான் அந்தப் பாவி அந்தக் காரியத்தை செய்தான்.

இந்த க்ரிக்கெட் மாட்சுல ஸ்லாக் ஓவரில் ‘க்ராஸ் சீம்’ பிடித்து போடுவார்களே அது மாதிரி அந்த ராஸ்கல் ஒருவழிப் பாதையில் குறுக்கே ‘சா….வ….கா…..ச…மா..க’ தன் மிதிவண்டியில் கடக்க முயல, நானோ ஸ்பீடில் இருக்க……

அது நடந்தது !

வேற என்ன ஒரு நூறு ரூபாய் அளவுக்கு சில்லறை.

தாடையில் அடி ; முகத்தில் சிராய்ப்பு ; மூக்குக்கண்ணாடி காலி ; முன் பல் ஒன்று 1/3 காலி, இன்னொரு பல்லில் 1/10 காலி.

ரத்தம் சொட்ட வீட்டுக்கு நானே (மீண்டும்) ஓட்டிச் சென்றேன் !

ட்ரஸ்ஸிங்க் போட்டு விட்டார் டாக்டர். மத்த காயம் பற்றி எனக்கு கவலையில்லை.

ஆனால் அந்த பல் விவகாரம்.

‘ஆலைப் போல வேலைப் போல் ஆலம் விழுது போல் மாமன் நெஞ்சில் நானிருப்பேனே’ என்று பாடிக்கொண்டு கட்டுக்கட்டாய் ஆலங்குச்சி அனுப்ப மாமன் மகள் எனக்கு இல்லாத போதும்,

என் பல்லை ஓரளவுக்கு நல்லாவே மெயின்டெயின் செய்து வந்தேன்.

பல்லில் அதிகம் படாதவாரு தான் தண்ணீர் குடிப்பேன் ; அடிப்பேன்.

தம் கூட அதிகம் உள் இழுக்காது பிடிப்பேன். அதுவும் அதிகம் அடிக்கமாட்டேன்.

ஒரு மாசத்துக்கு ஒரு நாலு அஞ்சு ? – இதுவும் சோஷியல் ஸ்மோக்கிங்

‘சுயேச்சையாக நானாக அடித்ததேயில்லை’

யார் கண் பட்டதோ முன்னர் வார-வாரம்-ஆரவாரம் என்று இருந்த எங்கள் ‘வெள்ளிக்கிழமை விரதம்’ (ஆமா வெள்ளிக்கிழமை மட்டும் நீ வீட்டுக்கு வரும் போது ஒரு பழ வாசனை வருதே அது ஏன்டா ? – இது அம்மா) இப்போது மூணு மாசத்துக்கு ஒரு முறை என்று குறைந்துவிட்டது.

அந்த சமயங்களில் ‘அமித்தாப்போடு ஜெயாபாதுரியும்’ உண்டு.

எப்பொழுதாவது ‘பிஞ்சிங்’கில் ஈடுபடும் போது (நார்த் இன்டியன், இல்ல சூப்பர் ஆந்திரா) மட்டும் சாதா பான்.

இப்போ சொல்லுங்க ‘டிட் மை டீத் டிஸர்வ் திஸ்’ ?

இந்தியன் மாதிரி ‘அதி ஸ்மார்ட்’ இல்லாவிட்டாலும் (நிஜம், நான் அவரது திருவுருவத்தை பார்த்திருக்கிறேன் !) நான் ஓ.கே லுக்கிங்க் என்றே நம்புகிறேன்.

முன்வரிசை பல் என்பதால் ஏஸ்தடிக் ப்ராப்ளம்.

உடனே வீட்டின் அருகே இருந்த ஒரு பல் மருத்துவரிடம் சென்றேன்.

பார்த்தார் !

‘பெரிய விஷயம் இல்லை ! சிமென்ட் வச்சு ரீ-கன்ஸ்ட்ரக்ட் பண்ணிவிடலாம் !’

‘என்ன சிமென்ட் சார் ? டால்மியாவா ?’ (விக்கல் நடுவிலும் நக்கல் செய்பவனாயிற்றே நான்)

‘ரூட் கனால் செய்து காப்பிங்க் செய்ய முடியாதா ?’

‘தேவையில்லை ! பெரிய லாஸ் இல்லை. சிமென்ட் ரீ-பில்லிங் போதும்’ என்று செயல்முறையை தொடங்கினார்.

யாராவது பல் மருத்துவரிடம் பல் சிகிச்சைக்குப் போய் இருக்கிறீர்களா ?

நரகத்தின் மீது நம்பிக்கை வந்துவிடும்.

இன்பாஃக்ட் ஒரு ஜோக்கே உண்டு

ஒரு பெண் பல் மருத்துவரிடம் சென்றாளாம் பல் பிடுங்க. டாக்டர் பல் பிடுங்கும் போது ‘அய்யோ அம்மா’ என்று கதறியதோடு

‘இந்த கஷ்டத்துக்கு இன்னொரு குழந்தையே பெத்துக்கலாம்’ எனவும், டாக்டர் உடனே

‘எது வேணும்னு தீர்மானமா சொல்லுங்க. அதுக்கு ஏத்த மாதிரி சேரை அட்ஜஸ்ட் செய்யணும் நான்’ என்றாராம்.

எப்படியிருக்கு ?

சாத்வீகமான என் கதையில் (???) ‘கோவிந்தமான’ இந்த இடைச்செறுகல் தேவையா என்று நினைப்பவர்களுக்கும் திருமதி சுஜாதாவுக்கும் (நிச்சயம் கோபப்பட்டிருப்பார்கள்) ஒன்று நினைவூட்டுகிறேன்.

‘தலைவலியும் பல்வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும்’ என்பது சத்தியம்.

எல்லை மீறிய வலியின் போது ‘ஏ’த்தனமான ஜோக்குகளை மன்னிப்பீராக !

ஒரு நீள குழாய் மாதிரியான ஒரு வஸ்து ; கார் டையரில் காத்து அடிப்பார்களே, இரண்டு குழல் இருக்குமே ஒன்று காற்றுக்கு, ஒரு அழுத்தத்துக்கு அது போல;

ஒன்றில் தண்ணீர் பீய்ச்சி அடித்தார். மற்றொன்றின் கூர் முனை கொண்டு ஸ்க்ரேப்பிங் செய்தார்.

டைல்ஸ் வருவதற்கு முன்பு மொஸைக் தரை பாலிஷிங்க் கவனித்துண்டா நீங்கள் ?

அப்போது ஒரு வித ஒலி வருமே ? அது மாதிரி தான் இதுவும்.

நடுநடுவே ஒரு பேஸினில் எச்சில் – ரத்தம் – தண்ணீர் துப்பிக்கொண்டேயிருக்க வேண்டும்.

கொடுமை.

‘துப்பார்க்கு துப்பாய’ குறளே தோற்கும் அளவிற்கு துப்பி முடித்ததும் பல் ரீகன்ஸ்ட்ரக்ட் ஆயிற்று.

மருத்துவரின் அட்வைஸ்.

கடினமான எதையும் சாப்பிடாதீர்கள்

முக்கியமாக கபாப் போன்றவற்றை (மருத்துவர் இஸ்லாமியர்)

நான் – போச்சு, போச்சு எல்லாம் போச்சு…ஏ கல்மி கபாப்பே, ட்ரம்ஸ் ஆப் ஹெவனே (இரண்டும் கோழி கால் அயிட்டம்கள்) உங்களிடமிருந்து பிரியா(ணி)விடை பெறுகிறேன்.

பழங்களில் கடினமான பழம் சாப்பிடாதீர்கள் – கொய்யா, பச்சை மாங்காய் இரண்டுக்கும் டாட்டா.

இதெல்லாம் விடுங்க.

சாப்பிடும் போடு ஒரு மனுஷன் செல்ப் – கான்ஷியஸ்ஸா சாப்பிடுவது எவ்வளவு பெரிய கொடுமை தெரியுமா ?

தந்தூர் ரோட்டி என்றால் முதலில் சின்ன துண்டா பிய்க்கணும். அப்புறம் இடது பக்கமா கடிக்கணும். உள்ளே சின்ன வெங்காயம் வக்காம சாப்பிடணும். சோலே மசாலாவாயிருந்தா உள்ள தள்ளி கடவாய் பல்லில் தான் மெல்லணும்.

சிமென்ட்டுடன் சமரசம் செய்த சில வருடங்களில் போன்லெஸ் தான் ஆர்டர் செய்யணும்.

மீன் முள் எடுத்து பொறுமையா சாப்பிடணும்.

நல்ல வேளை எனக்கு மட்டனில் சீக் கபாப் மட்டும் தான் பிடிக்கும் – அது எலும்பில்லாதது.

இப்படி என் தியாக வரலாறு இருக்க நேற்று தஸேரி மாம்பழம் சாப்பிடப் போய் சிமென்ட் பிய்த்துக்கொண்டு வந்து விட்டது.

இந்த ஆகஸ்ட் வந்தால் சிமென்ட்க்கு வயது ஆறு !

அதற்குள் அதன் ஆயுசு முடிந்துவிட்டது.

ஒரு கண்ணில் ஆட்டின் கண் இருந்தாலும் ‘டைகர்’ என்று அழைக்கப்படும் கரீனா கபூரின் மாமனார் போல நானும் ‘டால்மியா ஹர்ரி’ என்று பேர் வாங்க நினைத்த என் எண்ணம் பாழ்.

ஆறு வருடம் கழித்து மீண்டும் பல் மருத்துவ தரிசனம்.

அதுவும் செரி காமெடி.

என் நகரத்து ஜஸ்ட் டயல் தொடர்பு கொண்டு ‘பல் மருத்துவர்களின்’ லிஸ்ட் கேட்டதும் தான் தாமதம் ;
போன் மேல போன் !

யாரா ?

டாக்டர்களே செய்தார்கள்.

வருவாய் கம்மியோ ? போட்ட காசு இதில் சீக்கிரம் எடுக்க முடியாது போல ? ஹான் ?

ஒரு டாக்டர் ஆடித் தள்ளுபடி லெவலுக்கு டிஸ்கவுன்ட் தருவதாக சொன்னார். எனக்கு சிரிப்பு வந்தது.

இறுதியாக ஒரு பெண் பல் மருத்துவரிடம் சென்றேன்.

‘சிமென்ட் ஐந்து வருடம் இருந்ததே ஆச்சரியம்..யூ ஆர் லக்கி’ என்றார்.

தம்மாத்துண்டு ஸ்டாம்ப் சைஸில் எக்ஸ்-ரே எடுத்தார்.

‘ஆறு பல் அபெக்ட் ஆகியிருக்கு…ப்ராக்சர்…இன்டர்னல் பஸ் பார்மிங்…உனக்கு வலி இருக்கவில்லையா ?’

‘இல்லையே’

ஒரு சந்தேகப் பார்வை பார்த்தார்.

(என் பல் உலகின் ஒன்பதாவது அதிசயமோ ?)

‘ரூட் கனால் பண்ணணும் ஒரு பல்லுக்கு ரூ 2500..அப்பறம் காப் ரூ 3000 ல்லிருந்து ரூ 12,500 வரை இருக்கு’

நான் மனக்கணக்கில் இறங்க

‘என்ன ?’ என்றார் மருத்துவர்.

‘இல்ல நான் இப்போ ரீசன்ட்டா ஒரு க்ளப் மெம்பர்ஷிப் வாங்கினேன். அதைவிட இது காஸ்ட்லியா இல்லையா என்று கணக்குப் போட்டேன்’

சிரித்தார்.

‘எந்த க்ரவுன் (காப்) நீங்க ரெக்கமன்ட் பண்ணுவீங்க ?’

‘அஸ் எ டாக்டர், ரூ 12,500 தான் பெஸ்ட்’

கணக்கு பண்ணுங்க…சுமார் ரூ 93,000 வரும்.

ரூ 30,000 மட்டும் கம்பெனி கொடுக்கும் ; மீதி ?

வேறென்ன ?

‘கடன் பட்டார் நெஞ்சம் போல்……..’

அமலன் வேற நான் பணக்காரங்க கூட மட்டும் பேசுவேன் என்று நக்கல் அடிப்பார் !

ரூட் கானல் தொடங்கியது. ரூ 15,000 தேய்த்தேன்.

ஒரு ஆறு ஊசி வாய்க்குள் – லோக்கல் அனஸ்தீஷியா !

அப்புறம் அதே !

ரத்தம் – எச்சில் – துப்பு….

இதுல மூக்கு பெரிசான மாதிரி ஒரு ஃபீல்…

ஒரே குழப்பமாயிருக்கு !

ரூட் கானல் செய்வதா வேண்டாமா ?

பணம் போனால் போகிறது ; டாக்டர் சொல்வது பொய்யா மெய்யா ?

‘என்ன வச்சு காமெடி கீமடி பண்ணலையே’ என்பது தான் என் தற்போதைய மிகப்பெரிய கவலை.

இரண்டாவது ஒப்பீனியனுக்கு வேறு ஒரு பல் மருத்துவரிடம் நாளை செல்கிறேன்.

மாம்பழத்தின் மீது நான் நொந்து கொள்ளும் போது தான் ‘அவன்’ நினைவு வந்தது.

என்ன ஒரு ரூ. 1500 இருக்குமா அட்லாஸ் சைக்கிள் ?

அதனால எனக்கு எத்தனை கஷ்டம் பாருங்கள் !

பணக்கஷ்டம் ; வலி ; ஜாக்கிரதை உணர்வோடு சாப்பிடவேண்டிய அவலம் !

இனி ஜென்மத்துக்கும் காப் அணிய வேண்டும்.

இன்று என் அலுவலகப் பணிகள் எல்லாம் பாழ்.

இத்தனை கஷ்டம் எனக்கு தந்துவிட்டு ‘அவன்’ எங்கிருக்கிறானோ ?

யார் கண்டது, என்னை இடித்த நேரம் டொயோட்டா இன்னோவாவில் போய்க்கொண்டிருக்கிறானோ என்னவோ ?

அந்தப் படுபாவி மீது நான் கொலைவெறியுடன் இருப்பது தவறா மக்களே ?

‘அவனை…’ என்று கடுப்பில் பல்லை நறநற என்று கடித்துவிட்டேன்…

‘ஸ்.ஆ.ஆ’ வலி உயிர் போகிறது !

Advertisements

About hariharanbond
I am who I am !

7 Responses to கதையல்ல நிஜம்

 1. vakulam says:

  Hi hari

  Very nice to read such a wonderful happening. This would have been written for humor but it made me laugh through out. So happy that this day has started with a great laugh. Thanks

 2. Excellent. Amazing. Strange and unbelievable !!.

  Well, you may wonder what’s so much “unbelievable” in this writeup ?

  Just, i want to know how do you know my story?.
  (Surprisingly, this is the first one i read in your blogsite).

 3. Krishnan says:

  Hari Hari Hari..

  I cannot but be lost all over again, forget my time and space, ringing phones and friends stopping at my desk but I am minding my own tooth business in Bangalore! Ah.. Master story teller. You’ve a gift Hari!

 4. a grand jovian says:

  🙂

 5. Pravaahan says:

  hi.. very nice hari…
  Pravaahan

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: